தென் ஆப்பிரிக்காவில் பரவும் வன்முறை: பலி எண்ணிக்கை 117 ஆக உயர்வு

16 July 2021, 10:54 pm

Disgruntled residents throw rocks as they confront police officers at the entrance of a partially looted mall in Vosloorus, on July 13, 2021. - Stores in two South African provinces were ransacked for a fifth consecutive day, hours after President Cyril Ramaphosa deployed troops in a bid to quell unrest that has claimed 45 lives. The premier of Gauteng province, which includes Johannesburg, said 10 bodies were found late on July 12 at a looted shopping centre in Soweto, on the city's outskirts. (Photo by MARCO LONGARI / AFP)

Quick Share

தென் ஆப்பிரிக்காவின் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த நிலையில் ஜேக்கப் ஜூமாவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.‌ சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து வரும் போராட்டங்களையும், வன்முறைகளையும் கட்டுப்படுத்த கலவரக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தென்னாப்பிரிக்காவில் கலவரம் பரவி வருவதால் 75 ஆயிரம் வீரர்கள் நாடு முழுவதும் களமிறக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் பிரதான எதிர்க்கட்சி பயங்கரவாதிகள் அமைதியின்மையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டி உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் வன்முறை-கலவரத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 117 ஆக அதிகாரித்துள்ளது.

Views: - 161

0

0