ஒரே நாளில் 500’க்கும் மேற்பட்ட இறப்புகள்..! அச்சத்தில் ஸ்பெயின்..!

24 March 2020, 7:31 pm
Spain_UpdateNews360
Quick Share

மாட்ரிட் : கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் மேலும் 514 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 2,696 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 40,000’த்தை நெருங்கியுள்ளது என்று அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரித்து 39,673 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 23.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா இறப்பில் ஐரோப்பிய நாடான இத்தாலி முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொடங்கிய சீனா இரண்டாவது இடத்தில உள்ளது.

இந்நிலையில், மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், விரைவில் சீனாவை முந்திவிடும் என ஸ்பெயின் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.