ராமாயணம் மற்றும் மகாபாரதங்களைக் கேட்டு வளர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர்..!

17 November 2020, 11:04 am
Barack_Obama_UpdateNews360
Quick Share

ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற புராண இந்து காவியங்களைக் கேட்டு இந்தோனேசியாவில் தனது குழந்தை பருவ ஆண்டுகளைக் கழித்ததால், தான் எப்போதும் இந்தியாவுக்கு ஒரு சிறப்பு இடத்தைக் கொடுத்துள்ளதாக முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்தார்.

“உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பகுதியும், இரண்டாயிரம் தனித்துவமான இனக்குழுக்களும், எழுநூறுக்கும் மேற்பட்ட மொழிகளும் பேசப்படும் நாடு தான் இந்தியா” என்று ஒபாமா தனது சமீபத்திய புத்தகமான ‘ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்’ எனும் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

2010’ல் தனது அதிபர் வருகைக்கு முன்னர் தான் ஒருபோதும் இந்தியாவுக்கு வந்ததில்லை என்று ஒபாமா கூறியுள்ளார். ஆனால் இந்தியா தனது கற்பனையில் எப்போதும் ஒரு உயரிய இடத்தைப் பிடித்திருந்தது என அவர் கூறியுள்ளார்.

“இந்தோனேசியாவில் எனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியை ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் காவிய இந்து புராணங்களைக் கேட்டு வளர்ந்ததாலோ, அல்லது கிழக்கு மதங்களில் எனக்குள்ள ஆர்வம் காரணமாகவோ அல்லது பாகிஸ்தான் மற்றும் இந்திய கல்லூரி நண்பர்கள் குழு காரணமாகவோ இது இருக்கலாம். இது தான் டால் மற்றும் கீமாவை சமைக்க எனக்கு கற்றுக் கொடுத்தது மற்றும் பாலிவுட் திரைப்படங்களுக்கு என்னைத் திருப்பியது.” என்று ஒபாமா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்” எனும் தனது புத்தகத்தில் ஒபாமா, 2008 தேர்தல் பிரச்சாரத்திலிருந்து அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைக் கொன்ற துணிச்சலான அபோட்டாபாத் தாக்குதலுடன் தனது முதல் பதவிக்காலத்தின் இறுதி வரை தனது பயணத்தை விவரிக்கிறார்.

“ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்” இரண்டு திட்டமிடப்பட்ட தொகுதிகளில் முதலாவதாகும். தனது இரண்டாவது ஆட்சிக் காலம் குறித்து அடுத்த தொகுதியையும் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 thought on “ராமாயணம் மற்றும் மகாபாரதங்களைக் கேட்டு வளர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர்..!

Comments are closed.