ஐயோ என்ன காப்பாத்துங்க… அணிலிடம் சிக்கி கதறிய மயில்! வைரல் வீடியோ

17 January 2021, 8:46 am
Quick Share

ஒரு பெரிய அணில் ஒன்று, மயிலின் தோகையை கடித்து கதறவிட, அதனிடமிருந்து தப்ப மயில் படும் பாடு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அனைவரும் காலையில் செய்தித்தாள்களை படிக்கிறார்களோ இல்லையோ. அனைவரின் கண்ணும் சமூக வலைதளங்களில் தான் எப்போதும் இருக்கிறது. செய்திகள், அன்றாட நிகழ்வுகள், வீடியோக்கள் என பல நிகழ்வுகள் தினமும் வைலராகி கொண்டு தான் இருக்கின்றன. மனிதர்களை பற்றியோ அல்லது விலங்கு உலகத்தை பற்றியோ, சில நேரங்களில் நகைச்சுவையாகவும் அல்லது தீவிர பிரச்சனை அடிப்படையிலோ அந்த வீடியோ வைரலாகும்.

இன்று காட்டு விலங்குகளுக்கு இடையே நட்பின் வீடியோ வைரலானால், நாளை அவற்றின் குறும்புகள் அல்லது சண்டைகள் வைரலாகும். அந்த வகையில், அணிலும், மயிலும் பொது இடத்தில், மக்கள் முன்னிலையில், சண்டையிடும் காட்சி ஒன்று, அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது மட்டுமன்றி, நெட்டிசன்களுக்கும் கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறது.

அந்த வீடியோவில், அழகான மயில் ஒன்று மழை வருவதற்கு முன், தோகை விரித்து ஆட முயன்றது. இதைக் கண்ட சுற்றுலா பயணிகள் உடனே மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். மயில் தோகை விரித்ததும், மரத்தில் நின்றிருந்த அணில் கீழே ஓடி வந்து, தோகையை வாயால் கவ்வி இழுத்தது.

பதறிப்போன மயிலோ அணிலின் பிடியில் இருந்து தப்பிக்க, எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது. பின்னர், அணிலே போதும் இந்த விளையாட்டு என நினைத்தது போல், தோகையை விட்டுவிட்டு மரத்தில் ஏறி விடுகிறது. இந்த காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Views: - 8

0

0