இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வலியுறுத்தல்..! தமிழீழ அரசியல் கட்சிகள் மீண்டும் கடிதம்..!

16 January 2021, 5:34 pm
Srilankan_Tamils_Protest_UpdateNews360
Quick Share

ஏறக்குறைய முப்பதாண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரால் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசிடமிருந்து பொறுப்புணர்வை உறுதிசெய்ய கடுமையான காலக்கெடுவுடன் கூடிய சர்வதேச சுயாதீன விசாரணை அமைப்பை நிறுவுமாறு இலங்கையின் சிறுபான்மை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தியுள்ளன.

ஜனவரி 15’ஆம் தேதி, ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 47 உறுப்பு நாடுகளுக்கு எழுதிய , சிரியாவில் உள்ளதைப் போன்ற ஒரு சான்று சேகரிக்கும் செயல்முறையை ஒரு வருட கால அவகாசத்துடன் நிறுவுமாறு அழைப்பு விடுத்தனர்.  

இலங்கையின் பொறுப்புக்கூறல் குறித்து புதிய தீர்மானத்தையும் இயற்ற அவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கை 2013 முதல் தொடர்ச்சியாக மூன்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானங்களை எதிர்கொண்டது. இது 2009’ல் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் அரசாங்க ராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இருவருமே செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்தது.

இலங்கையின் யுத்த வலயங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் 2009’ல் அப்போதைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் கூறியதை தமிழ் மற்றும் சிவில் சமூக குழுக்கள் நினைவு கூர்ந்தன.

இலங்கையின் உறுதிமொழிகளை மதிப்பீடு செய்ய ஐநா மனித உரிமைகள் ஆணையம் அடுத்த மாதமும் மார்ச் மாதமும் சந்திக்க உள்ளது என்று குழுக்கள் கூறுகின்றன.

மனித உரிமைகள் குறித்த விசாரணையில் இலங்கை தோல்வியுற்றது என்றும், ஐ.நா.பாதுகாப்புக் குழு இந்த விஷயத்தை எடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் இலங்கையின் துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்க ஒரு பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் செயல்முறையின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 8

0

0