இந்தியாவிடம் தடுப்பூசி கோரும் இலங்கை: சீரம் மருந்தை மட்டும் பயன்படுத்த முடிவு..!!

27 February 2021, 4:40 pm
Corona_Vaccine_Serum_Institute_UpdateNews360
Quick Share

கொழும்பு: சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி மருத்துவ சோதனைகள் முழுமையாக நிறைவடையாததால் இந்தியாவின் சீரம் தடுப்பூசியை மட்டும் பயன்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை தான் புனேவிலுள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்கிறது.

வளரும் நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்து, விநியோகிக்கும் பொறுப்பு சீரம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இந்திய அரசும் இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இலவசமாக சீரம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. சீரம் தடுப்பூசிகளைக் கொண்டு பல நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கிவிட்டன.

அதன்படி இலங்கையிலும் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. முன்னதாக, பொதுமக்களுக்கு தடுப்பூசியை வழங்க சீரம் தடுப்பூசியுடன் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியையும் பயன்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டிருந்தது. சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் மருத்துவ சோதனை இன்னும் முழுமையாக நிறைவடையாததால், சினோபார்மை பயன்படுத்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை அரசு தன் நாட்டிலுள்ள 1.4 கோடி மக்களுக்கு சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியை மட்டுமே செலுத்த மட்டுமே தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நட்பு நாடு என்ற அடிப்படையில் இலங்கை நாட்டிற்கு சுமார் 5 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்தது. இதுபோக சுமார் ஒரு கோடி தடுப்பூசிகளை சீரம் நிறுவனத்திடம் 35 லட்சம் தடுப்பூசிகளை நேரடியாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடமும் இலங்கை அரசு ஆர்டர் செய்துள்ளது.

Views: - 7

0

0