சீனாவில் தயாரித்த ரயில்களை இயக்க மாட்டோம்: இலங்கை ரயில் ஓட்டுநர்களின் அதிரடி அறிவிப்பு..!!

5 February 2021, 1:14 pm
srilanka train - updatenews360
Quick Share

கொழும்பு: சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்களை இயக்குவதை புறக்கணிக்க இலங்கை ரயில் டிரைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வலுவாக காலூன்ற சீனா தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறது. சீனாவின் இந்த முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், இலங்கை ரயில் ஓட்டுநர்களின் அறிவிப்பு அமைந்துள்ளது. இலங்கையின் ரயில் என்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளர் இந்திகா சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில் வண்டிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. சீன ரயில் பெட்டிகளில் பிரேக்குகள் கோளாறாக உள்ளன. பிரேக்குகளை அழுத்தும்போது, நிறுத்தவேண்டிய இடத்தை விட கூடுதல் தூரம் சென்று நிற்கிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில் வண்டிகள் உள்ளூர் தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

சீனாவில் தயாரிக்கப்படும் ரெயில் வண்டிகள் குறித்து எழுப்பப்படும் குறைபாடுகள் தீர்க்கப்படும் வரை என்ஜின் ஓட்டுநர்கள் அந்த ரயில் வண்டிகளை இயக்குவதை புறக்கணிப்பார்கள் என அறிவித்துள்ளனர். இலங்கையில் குறைபாடுகள் கொண்ட சீன ரயில் பெட்டிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ரயில்வே பொறியியல் துறைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் கடந்த செப்டம்பர் மாதம் அறிவுறுத்தி இருந்தார்.

சீன ரயில் பெட்டிகளில் பிரேக்குகள் கோளாறு காரணமாக சமீபத்திய காலங்களில் கிட்டத்தட்ட 200 விபத்துக்கள் பதிவாகி உள்ளதாக என்ஜின் டிரைவர்கள் சங்கம் கூறி உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில்களும் இலங்கையில் உள்ளன என்பது குறிப்படத்தக்கது.

Views: - 25

0

0