இலங்கையில் முடிந்தது நாடாளுமன்ற வாக்குப்பதிவு…! ராஜபக்சே கட்சி வெற்றி பெறுகிறதா..?

5 August 2020, 6:34 pm
Quick Share

கொழும்பு: பெரும் பரபரப்புகளுக்கு இடையே இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

இலங்கையில் மார்ச் 2ம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை அதிபர் ராஜபக்சே பிறப்பித்து இருந்தார். பின்னர் அதிகாரப்பூர்வமாக ஏப்.25ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் உலகை உலுக்கிய கொரோனா, இலங்கையையும் பதம் பார்க்க, தேர்தல் ஜூன் 20ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தமது தாக்குதலை தொடர்ந்ததால் இன்றைக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, மொத்தமுள்ள 225 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கொரோனா காரணமாக, சமூக இடைவெளியுடன் வாக்குப்பதிவு நடந்தது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதமும் இன்றி நிறைவு பெற்றது.

வழக்கமாக இலங்கையில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடியும். ஆனால் கொரோனா காரணமாக ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி வாக்குப்பதிவு முடிந்த நிலையில் நாளை காலை 7 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நாளை பிற்பகலுக்குள் அனைத்து இடங்களுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இம்முறை நடைபெற்ற இந்த தேர்தலில் மும்முனை போட்டி என்றாலும், ராஜபக்சே கட்சிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. 

Views: - 8

0

0