இந்தியாவின் கொரோனா தடுப்பூசியால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை: இலங்கை அரசு தகவல்..!!

31 January 2021, 5:25 pm
sri vaccine - updatenews360
Quick Share

கொழும்பு: இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பெற்று, இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா, நல்லெண்ண அடிப்படையில் நமது அண்டை நாடுகளுக்கு வழங்கி வருகிறது. அதன்படி, பூடான், மாலத்தீவு நேபாளம், வங்கதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் இலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது.

சமீபத்தில் இலங்கைக்கு 5 லட்சம் டோஸ் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்தது. இதனை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கொழும்பு விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டார். இலங்கையிலும் இந்தியாவைப் போல, முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட முன்கள வீரர்களுக்கு ஜனவரி 29ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதில் முதல் நாளில் 5,286 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர்களில் யாருக்கும் தடுப்பூசியால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0