ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை: தாமதமாகும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு…!!

7 November 2020, 11:25 am
trumph joe - updatenews360
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து 3வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடனுக்கும், குடியரசு கட்சி வேட்பாளரும், அதிபருமான ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கொரோனா அச்சத்தாலும், முன்கூட்டியே வாக்கு அளிப்பதை பல மாகாணங்களும் எளிமைப்படுத்தியதாலும், இந்த முறை முன்கூட்டி வாக்கு அளித்தவர்களும், தபால் மூலம் வாக்களித்தவர்களும் அதிகம், கடந்த 2016 தேர்தலில் இந்த எண்ணிக்கை 4.60 கோடியாக இருந்துள்ளது.

Joe_Biden_Updatenews360

இந்நிலையில், பென்சில்வேனியா, ஜார்ஜியா, அரிசோனா, வட கரோலினா, நெவாடா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் ஓட்டு எண்ணிக்கை நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. அங்கு வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் பிரசார குழு நீதிமன்றத்தை நாடியபோது, அது நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜார்ஜியா மாகாணத்தில் இருவருக்கும் இடையே பெரிய அளவில் வாக்குகள் வித்தியாசமின்றி இழுபறி நீடித்து வந்த நிலையில், ட்ரம்பை விட ஜோ பிடன் அதிக வாக்கு வித்தியாசத்தில் இருந்தார். இதனையடுத்து, ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ட்ரம்ப் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்த போதிலும், ஜார்ஜியா மாகாண அரசு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த முறை நடந்த அமெரிக்க தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

Views: - 22

0

0