ஸ்பெயினில் நீரில் மூழ்கிய கிராமங்கள்: நீர்வற்றியதால் வெளியே தெரியும் வீடுகள்…30 வருடங்கள் ஆகியும் உருக்குலையாத கட்டிடங்கள்…!!

Author: Aarthi Sivakumar
27 November 2021, 4:51 pm
Quick Share

ஸ்பெயின் நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய 5 கிராமங்கள் நீர் வற்றத் தொடங்கியதால் மீண்டும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் லிமியா நதியின் குறுக்கே அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், சில காரணங்களால் அணையின் அருகில் கட்டப்பட்ட நீர்மின் நிலையம், அணையின் மதகுகள் 1992ம் ஆண்டு மூடப்பட்டது.

இதன் காரணமாக, நீர் தேங்கி Ourense மாகாணத்தின் Aceredo உள்ளிட்ட 5 கிராமங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கியது. இதனால், இந்த கிராமங்களில் வசித்த மக்களை வெளியேற்ற அரசு உத்தரவிட்ட நிலையில், மக்கள் இதற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மக்களின் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், தங்களது வசிப்பிடத்தை காலி செய்துவிட்டு வாழ்வாதாரம் தேடி வேறு பகுதிகளுக்கு சென்றனர். இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, அணையின் நீர்வற்றத் தொடங்கியதால், நீரில் முழ்கிய கிராமங்கள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. கிராமங்களின் பெரும்பாலான வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ள நிலையில் காணப்படுகிறது.

Views: - 567

0

0