ஆப்கனில் தொடரும் அட்டூழியம்: அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளில் 3 பொதுமக்கள் பலி..பொறுப்பேற்காத பயங்கரவாத அமைப்புகள்..!!

Author: Aarthi Sivakumar
19 September 2021, 11:47 am
Quick Share

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி அதிகாரம் தலிபான்களிடம் சென்றுள்ளது. ஆப்கனில் போதிய உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 5 வயதுக்கு உட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வருகின்றனர் என யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பி.டி.13 பகுதியில் திடீரென சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று நேற்று வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். இதேபோன்று நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் தலிபான்களை இலக்காக கொண்டு அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்து உள்ளன.

இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 3 பேர் பலியாகி உள்ளனர். 21 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்புகளில் 3 பேர் பொதுமக்கள் ஆவர். மற்றவர்கள் தலிபான் போராளிகள் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அந்நாட்டில் தலீபான்கள் பொறுப்பேற்ற பின்பு நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த முதல் குண்டுவெடிப்பு இதுவாகும். இதற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Views: - 365

0

0