சீனாவில் ரசாயன ஆலையில் திடீர் வெடிவிபத்து: 4 பேர் பரிதாப பலி…பலர் படுகாயம்…!!

Author: Aarthi Sivakumar
24 October 2021, 8:40 am
Quick Share

பெய்ஜிங்: சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனாவின் வடக்கே இன்னர் மங்கோலியா சுயாட்சி பகுதியில் ரசாயன ஆலை ஒன்று அமைந்துள்ளது. இதில், திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த வெடிவிபத்தில் ஏற்பட்ட தீ நேற்று கட்டுக்குள் கொண்டு வரவப்பட்டது. இந்த நிறுவனத்தின் பிரதிநிதியை போலீசார் பிடித்து சென்றுள்ளனர்.

தீவிபத்து ஏற்பட்டதையடுத்து நிறுவன உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் பற்றி குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 604

0

0