சுவிஸ் போலீசின் ‘ஜெருசலேமா’ வைரல் டான்ஸ்; ஐரிஸ் போலீசாரும் ரெடியாம்!

19 January 2021, 12:18 pm
Quick Share

சுவிட்சர்லாந்து நாட்டு போலீசார், ‘ஜெருசலேமா’ பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டதுடன், ஐரிஸ் போலீசாருக்கு சவால் விட, அந்த சவாலை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அட்டகாசமாக நடனமாடும் போலீசாரின் இந்த வீடியோ செம வைரலாக பரவி வருகிறது.

சுவிட்சர்லாந்தின் ஜூகர் பாலிஜி போலீசார், பணியில் இருந்த போது, தங்களை மகிழ்வித்து டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டனர். சுமார் 4 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் போலீசார், பிரபலமான ‘ஜெருசலேமா’ பாடலுக்கு அற்புதமாக நடனமாடியிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பேஸ்புக்கில் மட்டும் இந்த வீடியோவை 8 மில்லியன் பேர் பார்த்து ரசித்தனர். சுவிட்சர்லாந்தில் மட்டும், உலகமெங்கிலும் உள்ள பலரின் இதயங்களை இந்த வீடியோ வென்றது.

மாஸ்டர் கே.ஜி. இசையில், ஆப்ரிக்க பாடகரான நோம்செபோ ஜிகோட் பாடிய ‘ஜெருசலேமா’ பாடலுக்கு, உயர் அதிகாரிகள் முதல், கட்டுப்பாட்டு அறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வரை சேர்ந்து நடனமாடியிருந்தனர். இந்த வீடியோவை பகிர்ந்தவர், ‘சில நேரங்களில் புன்னகையுடன், வாழ்க்கையை சந்திக்க இது அதிகம் தேவையில்லை. உங்கள் முகத்தில் புன்னகையை வர வைக்க நாங்கள் எதையும் செய்வோம்’ என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ கிளிப் வைரலாகிய நிலையில், போர்ச்சுகலை சேர்ந்த ஐரிஷ் வானொலியின் டி.ஜே., பிரான்கி பீட்ஸ் என்பவர் அந்த வீடியோவைப் பகிர்ந்து, அயர்லாந்தின் தேசிய காவல்துறையான கார்டாவிடம் ‘ஜெருசலேமா’ நடன சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, சுவிஸ் ஃபெடரல் காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், சவாலை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0