பஞ்ச்ஷிர் மாகாணத்தில் 600 தலிபான்கள் பலி: ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது

Author: Udhayakumar Raman
5 September 2021, 7:54 pm
Quick Share

பஞ்ச்ஷிர் மாகாணத்தில் நடைபெற்ற சண்டையில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு படைகளுக்கும் தலிபானுக்கும் போர் நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் இருந்து வந்தன அமெரிக்க படைகள், ஆப்கனில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து, ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றினர். அவர்கள் விரைவில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளனர். ஆப்கானிஸ்தானின் பெரும்பா லான மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்களால் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியவில்லை. அந்தப் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் தலிபான் படைகள் ஈடுபட்டுள்ளன. அவர்களை எதிர்த்து பஞ்ச்ஷிர் போராளிகள், கடுமையாக போர் புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். பஞ்ச்ஷிர் மாகாணத்தின் தலைநகரான பஸாரக் மாவட்டத் துக்குள் நுழைந்துவிட்டதாகவும் அந்த மாகாணத்தின் ஷுதுல், அனபா மாவட்டங்களை கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், இதை மறுத்துள்ள போராளிக் குழுக்கள், கசபா மற்றும் பஞ்ச்ஷீர் எல்லைப் பகுதிகளிலேயே தலிபான்கள் தடுக்கப்பட்டு விட்டனர் என்றும் இந்த சண்டையில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும், ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Views: - 410

0

0