ஆப்கான் அரசின் தலைவர், துணைத்தலைவர் அறிவிப்பு

By: Udayaraman
7 September 2021, 9:36 pm
Quick Share

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்ற்றிய தலிபான் அரசின் புதிய தலைவராக முகமது ஹசன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் துணைத் தலைவராக அப்துல் கனி பராதர் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு, 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசு அமைக்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.இதையடுத்து புதிய அரசின் நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டனர். புதிய அரசு விரைவில் பதவி ஏற்க உள்ள நிலையில் இன்று தலிபான் அரசின் தலைவராக முல்லா முகம்மது ஹசன் அகுந்த், துணை தலைவராக அப்துல் கனி பராதர், உள்துறை அமைச்சராக சிராஜூதின் ஹக்கானி, பாதுகாப்புத்துறை அமைச்சராக யாகூப் உள்ளிட்டோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். முன்னதாக ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.முன்னதாக புதிய அரசு பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த தகவல் தலிபான்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 277

0

0