தலிபான் தீவிரவாத தலைமைக்கு கொரோனா தொற்று..? பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் அனுமதி..!

22 May 2020, 10:51 pm
USA_Taliban_Deal_UpdateNews360
Quick Share

தலிபான் துணைத் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி மற்றும் மூன்று தீவிரவாதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி மற்றும் காபூலில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலிபானின் முக்கிய குழுவான ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவரான சிராஜுதீன் ஹக்கானி, சிகிச்சைக்காக பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி சல்மே கலீல்சாத் உடனான பேச்சுவார்த்தையில் தலிபானின் பேச்சுவார்த்தைக் குழுவுடன் தொடர்புடைய முல்லா அமீர் கான் முத்தாக்கி மற்றும் ஃபசல் மஸ்லூம் ஆகியோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மற்ற தலிபான் தலைவர்களில் அடங்குவர். முன்னதாக தோஹாவை தளமாகக் கொண்ட முல்லா நூருதீன் துராபியுடன் இரண்டு தலிபான் தலைவர்களும் குவெட்டா மற்றும் கராச்சியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

“சில ஊடகங்கள் துணை கலீஃபா சாஹிப் சிராஜுதீன் ஹக்கானி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்பது உட்பட பல தலைவர்கள் குறித்து போலி அறிக்கைகளை பரப்புகின்றன. அவை பயத்தைத் தூண்ட முயற்சிக்கிறது.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

எவ்வாறாயினும், பயங்கரவாத எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் பல ஆதாரங்களில் இருந்து தகவல்களை சோதித்ததாக வலியுறுத்தினர்.

இந்த மாத தொடக்கத்தில் தோஹாவில் நடந்த தலிபான் கூட்டங்களில் ஃபசல் மஸ்லூம் காணப்படாததற்கு கொரோனா வைரஸ் தொற்று தான் என ஒரு அதிகாரி கூறினார்.

எவ்வாறாயினும், தலிபான் தலைவர்கள் எவ்வாறு நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள் என்பதற்கான உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
சிராஜுதீன் ஹக்கானி போன்ற தலிபான் தலைவர்களில் பெரும் பகுதியினர் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கமாக இருப்பதாக அறியப்படுகிறது. சிராஜுதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தான்-சோவியத் போரின்போது அதை அமைத்த அவரது தந்தை ஜலாலுதீன் ஹக்கானியிடமிருந்து பெற்ற பரம்பரை பயங்கரவாதக் குழுவான ஹக்கானி நெட்வொர்க்கிற்கும் தலைமை தாங்குகிறார்.

Leave a Reply