படகு கோளாறால் யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் : இலங்கை கடற்படையினர் விசாரணை..

10 November 2020, 11:49 am
TN Fishermans - Updatenews360
Quick Share

இலங்கை : யாழ்ப்பாணம் வடமராட்சி மா முனைப்பகுதியில் 4 இந்திய மீனவர்கள் நேற்று இரவு 8 மணி அளவில் கரை ஒதுங்கி உள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மீன்பிடி படகில் தொழிலுக்குச் சென்றனர். இந்த நிலையில் ஒரு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் எரிபொருள் தீர்ந்துள்ளன.

இந்த நிலையில் வேறு வழியின்றி யாழ்ப்பாணம் அருகே மாமுனை பகுதியில் கரை ஒதுங்கிய பின்னர் தாமாகவே சென்று இலங்கை கடற்படையினரிடம் தகவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற இலங்கை கடற்படையினர் இவர்களை போலிசாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Views: - 30

0

0