ஆற்று நீரின் நடுவே ‘ஜாலியா’ உட்காந்து சாப்பிடலாம்: அலைமோதும் மக்கள் கூட்டம்…வைரலாகும் ‘தாய்’ உணவகம்..!!

Author: Aarthi Sivakumar
11 October 2021, 2:18 pm
Quick Share

பாங்காக்: தாய்லாந்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு நடுவிலும் நடந்துவரும் கரையோர உணவகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தாய்லாந்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாவோ பிரயா ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


கரையோர உணவகங்கள் வெள்ள நீரில் மூழ்கியதால், ஏராளமானோர் உணவகங்களை பலர் மூடி விட்டனர். இந்நிலையில், பாங்காக் அருகில் உள்ள நொந்தன்புரியில், ஆற்றின் கரையோர உணவகங்களும் வெள்ளம் காரணமாக மூடப்பட்டன.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது வெள்ளமும் பாதிப்பை ஏற்படுத்துவதால் கரையோர ஓட்டல் உரிமையாளர்கள் கவலையில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் சோப்ரயா ஆண்டிக்யூ கபே என்ற ஓட்டலின் உரிமையாளர் வியாபாரத்தை பெருக்க புது யுக்தியை கையிலெடுத்துள்ளார்.

அதாவது, வெள்ளத்திற்கு நடுவில் உணவகத்தை திறப்பதுதான் அந்த முடிவு. மக்கள் வருவார்களா மாட்டார்களா என்றெல்லாம் அவர் கவலையே படவில்லை. நம்பிக்கையுடன் ஆற்று வெள்ளத்தில் உணவகத்தை திறந்தார்.

அவரது நம்பிக்கைக்கு கிடைத்த பலனமாக கூட்டமில்லாமல் வெறிச்சோடி கிடந்த மேஜை, டேபிள்கள் இப்போது படு பிஸியாகி விட்டன. வெள்ள நீரால் சூழப்பட்டிருக்கும் மேஜைகளில் அமர்ந்தபடி, ஜாலியாக முட்டியளவு நீரில் கால்களை நனைத்துக் கொண்டே, இங்கு சாப்பிடுவதை பலர் விரும்பத் தொடங்கியதால் கூட்டம் அலைமோதுகிறது.

இப்போது இந்த ஓட்டலில் இருக்கை கிடைக்க பலர் சில மணி நேரம் காத்திருந்து உணவுகளை உண்டு செல்கின்றனர். வெள்ளத்தில் திறக்கப்பட்ட இந்த ஓட்டல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 216

0

0