2020ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…!!!

9 October 2020, 3:27 pm
Quick Share

2020ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ‘உலக உணவு திட்ட அமைப்பு’க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

nobel - updatenews360

அந்த வகையில், இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஹெபாடைடிஸ்-சி வைரசை கண்டுபிடித்த விஞ்ஞானிகளான ஹார்வே ஜே. ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், மைக்கேல் ஹாக்டன் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

வேதியியலுக்கான நோபல் பரிசை இம்மானுவேல் சர்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசை, அமெரிக்க பெண் கவிஞர் லூயிக்லுக்கிற்கு அறிவிக்கப்பட்டது.

இந்த வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. உலக உணவு அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 58 ஆண்டுகளாக வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு அளித்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 53

0

0