கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் கூட்டாளி சோல்ட்டா என்கவுன்ட்டர் – இலங்கை போலீசார் அதிரடி

12 August 2020, 1:45 pm
Quick Share

கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் கூட்டாளி சோல்ட்டா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில், தாதாவாக வலம் வந்த அங்கொட லொக்கா கடந்த 2018-ஆம் ஆண்டு கோவைக்கு வந்து, சேரன்மாநகரிலுள்ள வாடகை வீட்டில் பல மாதங்கள் தங்கியிருந்தார்.

அவருடன் இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி என்பவரும் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 3 ம் தேதி, அங்கொட லொக்கா மர்மமான முறையில் இறந்தார்.

அவர் மாரடைப்பால் இறந்தாக கூறி, அரசு மருத்துவமனையில் சான்றிதழ் பெற்று,மதுரைக்கு சடலத்தை எடுத்து சென்று எரித்தனர். இந்த சூழலில், அவரின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது, அங்கொட லொக்காவின் கூட்டாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கூட்டாளியான சோல்ட்டா என்ற அசித ஹேமதிலகவை என்கவுன்டரில் இலங்கை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அழகு நிலையத்தில் பெண்ணை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 10

0

0