ஹாரி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது : இங்கிலாந்து ராணியை அசர வைத்த குழந்தையின் பெயர்!!

7 June 2021, 9:51 am
Harry Meghan- Updatenews360
Quick Share

மீண்டும் கர்ப்பமுற்ற ஹாரி தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழ்ந்தை பிறந்மதுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் பிரபல நடிகையுமான மேகனும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு அரசு குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததால், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் கடந்த ஆண்டு அரசு குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி தம்பதியின் கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது முறையாக கருவுற்றிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த பெண் குழந்தைக்கு லில்லிபெட் டயானா மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என பெயரிட்டுள்ளனர். டயானா என்பது ஹாரியின் தாயார் பெயரும், லில்லிபெட் என்பது ராணி எலிசெபத்தின் செல்லப் பெயர் என்பகு குறிப்பிடதக்கது.

Views: - 230

0

0