இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய பாரீஸ் நகரம்….!!!

18 October 2020, 9:56 am
paris - updatenews360
Quick Share

பாரீஸ்: கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கால் பாரீஸ் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

பாரீஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் கூட்டமின்றி, இரவு நேர விருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா 2வது அலையால் பாரிஸ் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மாக்ரான் 4 வாரங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கை அறிவித்தார்.

இரவு நேர பார்ட்டிகளால் தான் கொரோனா அதிகம் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொண்டு கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர்.