இத்தாலியின் எட்னா எரிமலை வெடிப்பு: பாதிப்பு கருதி பொதுமக்கள் வெளியேற்றம்..!!

5 February 2021, 8:32 am
etna valcona - updatenews360
Quick Share

ரோம்: இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியிட்டு வருகிறது.

இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி நகரில் அமைந்துள்ளது எட்னா எரிமலை. இது ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றாகும். கடந்த கால வரலாற்றில் இந்த எரிமலை பலமுறை வெடித்துள்ளது.

மேலும், இது புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் எட்னா எரிமலை கடந்த மாத இறுதியில் வெடிக்கத் துவங்கியது. தற்போது இந்த எரிமலையின் முகப்பு பகுதியில் இருந்து ‘லாவா’ எனப்படும் நெருப்புக் குழம்பையும், சாம்பலையும் வெளியிட்டு வருகிறது. இதனால் பாதிப்பு கருதி சுற்றுப்புறத்தில் உள்ள ஊர் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

இரவு நேரங்களில் எரிமலையில் இருந்து நெருப்பு ஜுவாலைகள் வெடித்துக் கிளம்பும் ஆபத்தான அழகை தூரத்தில் இருந்தபடி சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இன்னும் சில நாட்கள் எரிமலை வெடிப்பு தொடரக்கூடும் என்பதால் அந்த பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0