இந்தியர்கள் அனைவரையும் மீட்பதே முதல் பணி:மத்திய அரசு

Author: Udhayakumar Raman
26 August 2021, 11:02 pm
Quick Share

ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தூரிதமாக மீட்கும் பணிக்கே முக்கியத்துவம் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். சுமார் 15000 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற அரசை தொடர்பு கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்ற முக்கியத்துவம் கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

“பெரும்பாலான இந்தியர்களை தாயகம் அழைத்து வந்துள்ளோம். இருந்தாலும் ஆப்கனில் சிக்கியுள்ள அனைவரையும் அழைத்து வர வேண்டியுள்ளது. முடிந்தவரை அனைவரையும் தாயகம் அழைத்து வருவோம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெகு விரைவில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்” என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி மாதிரியானவர்களும் பங்கேற்றன. காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, முன்னாள் பிரதமர் தேவ கவுடா மாதிரியான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Views: - 224

0

0