ஸ்டார் வார்ஸ் தீம் சாங் பாடிய நாய்! வைரல் வீடியோ

27 February 2021, 9:10 am
Quick Share

பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஸ்டார் வார்ஸ் படத்தின் தீம் பாடலை, ஹஸ்கி வகையை சேர்ந்த நாய் ஒன்று பாட, அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜார்ஜ் லூகாஸ் இயக்கிய பிரபல ஹாலிவுட் திரைப்படம் ​​’ஸ்டார் வார்ஸ்’. அந்த திரைப்படத்தின் பாகங்களுக்கு இன்றளவும் உலகளவில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. படத்தில் வந்த கதாபாத்திரங்களை, அதன் ரசிகர்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அப்படத்தின் தீம் பாடலான ‘தி போர்ஸ் இஸ் ஸ்டிராங் வித் திஸ் ஒன்’ என்ற தீம் பாடல் மிகவும் பிரபலம். இந்த தீம் பாடலை அடிக்கடி முனுமுனுக்கும் அளவுக்கு, அதற்கு அடிமைகள் உள்ளனர். அதனையே நாய் ஒன்று செய்தால், சும்மா விடுவார்களா ரசிகர்கள்..

ஹஸ்கி வகையை சேர்ந்த மியா என்ற பெயர் கொண்ட நாய், ஸ்டார் வார்ஸ் தீம் பாடலை சிறப்பாக பாடுகிறது. முதலில் டிக்டாக்கில் பிரபலமான இந்த வீடியோ, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப்பிலும் வைரலாகிவிட்டது. வீரேட்டாக்ஸ் என்ற டுவிட்டர் பக்கம் இந்த வீடியோவை பதிவிட அது நெட்டிசன்களை கவர்ந்து விட்டது. ‘இது மியா.. ஸ்டார் வார்ஸ் தீம் பாடலை பாட கற்றுக்கொண்டு இருக்கிறாள்’ என அந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. 1.5 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். 16,300 ரீட்வீட் மற்றும் 1,14,300 லைக்குகளையும் அள்ளியுள்ளது.

நெட்டிசன்கள் மட்டுமல்லாமல், ​​’தி மாண்டலோரியன்’ படத்தில் நடிக்கும் நடிகையான மிங் நா-வென் கவனத்தையும் இந்த வீடியோ ஈர்த்தது. “பிராவோ மியா,” என அவர் பதிவிட்டு தனது பக்கத்தில் இந்த வீடியோவை அவர் ஷேர் செய்துள்ளார்.

Views: - 12

0

0