கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாட்டியை சரியாக கவனிக்காத மருத்துவமனை : மருத்துவர் வேடம் போட்ட பேரனுக்கு நேர்ந்த கதி!!
Author: Udayachandran RadhaKrishnan30 October 2021, 6:40 pm
ரஷ்யா : கொரோனா வார்டில் உள்ள தனது பாட்டியை மருத்துவர்கள் சரி வர கவனிக்கவில்லை என கருதிய பேரன் 3 நாட்கள் மருத்துவர் போல் வேடமணிந்து சிக்கிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள TOMSK நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக செர்கே என்பது தனது பாட்டியை அனுமதித்துள்ளார்.
ஆனால் மருத்துவர்கள் பாட்டியை சரியாக கவனித்துக்கொள்வதில்லை என அங்குள்ள நோயாளிகள் சிலர் செர்கேவிடம் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவர் போல் வேடமணிந்து 3 நாட்கள் தனது பாட்டியுடன் செர்கே தங்கி கவனித்துள்ளார்.
இந்த நிலையில் பாட்டியை வேறு வார்டுக்கு மாற்றியுள்ளனர். இது தெரியாத செர்கே, தனது பாதட்டியை தேடி மருத்துவமனையை சுற்றி சுற்றி வந்துள்ளார். இதனால் செர்கே சுலபமாக மருத்துவ நிர்வாகிகளிடம் சிக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து செர்கேவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர் போல வேடமணிந்து வந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாகாணத்தின் ஆளுநர் கூறியுள்ளார்.
0
0