தனிமையின் கொடுமையில் ‘கிஸ்கா’ திமிங்கலம்: தன்னை தானே துன்புறுத்திக் கொள்ளும் வீடியோ…குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள்!!

Author: Aarthi Sivakumar
17 September 2021, 11:26 am
Quick Share

கனடாவில் 42 ஆண்டுகளாக சிறை பிடித்து தனிமையில் வைக்கப்பட்டிருக்கும் திமிங்கலம் தன்னை தானே துன்புறுத்திக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கனடாவில் நயகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் Marineland என்ற என்ற கடல்வாழ் பாதுகாப்பு மையம் உள்ளது. அங்கு கிஸ்கா என பெயரிடப்பட்ட திமிங்கலம் சுமார் 42 ஆண்டு காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. திமிங்கல சரணாலய திட்டத்தின் கீழ் இந்த திமிங்கலம் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்து கடல் பகுதியில் வாழ்ந்த கிஸ்கா தற்போது கடும் மன உளைச்சலில் இருப்பதாக கருதப்படுகிறது. கடந்த மாதம் சமூக ஆர்வலர் பில் Marinelandக்கு சென்றுள்ளார். அப்போது கடும் மனா உளைச்சலில் இருந்த கிஸ்கா சுவற்றில் அதன் தலையை அடிக்கடி மோதியுள்ளது.

இதைப் பார்த்த பில் உடனே அதை வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு உடனடியாக கிஸ்காவை விடுவிக்க வேண்டும் என கோரியிருந்தார். அதை பார்த்த மற்ற சமூக ஆர்வலர்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதே கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

கிஸ்காவுக்கு தற்போது 44 வயது. கடந்த 1979ம் ஆண்டு பிறந்த கிஸ்காவை 2 வயதில் marinelandக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு கிஸ்கா ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. ஆனால், அவை அனைத்தும் மிக குறுகிய காலம் மட்டுமே உயிருடன் இருந்துள்ளன.

அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை குட்டி திமிங்கலங்கள் இருந்துள்ளன. 2011ம் ஆண்டுக்குப் பிறகு கிஸ்கா ஆண் துணையும் இன்றி 10 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறது. விலங்குகள் நல ஆர்வலர்கள் உடனடியாக கிஸ்காவை விடுவித்து அதன் உண்மையான வாழ்விடமான ஐஸ்லாந்து பகுதிகளில் மீண்டும் விட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Views: - 291

0

0