‘You bloody fool’ எனக்கூறும் மஸ்க் வாத்து: இணையத்தை கலக்கும் ஆடியோ!!

Author: Aarthi
11 September 2021, 1:55 pm
Quick Share

ஆஸ்திரேலியா: மஸ்க் வகை வாத்து ஒன்று மனிதர்களை போல You bloody fool என்ற வாக்கியத்தை உச்சரிக்கும் ஆடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் மஸ்க் வகை வாத்து ஒன்று மனிதர்களை போல You bloody fool என்ற வார்த்தையை கூறும் ஆடியோவை ஆராய்ச்சியாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். மஸ்க் வகை வாத்துகள் மற்ற உயிரினங்களை காட்டிலும் ஒலிகளை உள்வாங்கி அதனை எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய திறனை கொண்ட ஒரே நீர்ப்பறவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ரிக்பர் என்றழைக்கப்படும் ஆஸ்திரேலியா மஸ்க் வகை வாத்து அதன் பராமரிப்பாளர் உச்சரித்த you bloody fool என்ற வார்த்தை உச்சரித்ததுடன் வேகமாக சாத்தப்படும் கதவின் சத்தத்தையும் அப்படியே மிமிக் ஆடியோ ஒன்றை லைடன் பல்கலைக்கழகத்தின் நெறிமுறையாளர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும், சிலர் இது உண்மையல்ல என்ற கருத்துக்களையும் முன்வைத்து வருகின்றனர்.

Views: - 319

0

0