மோசமான வறுமையில் வாடும் துருக்மெனிஸ்தான் மக்கள்: நாயின் 19 அடி தங்க சிலையை திறந்துவைத்த அதிபர்…!!

13 November 2020, 2:08 pm
gold dog - updatenews360
Quick Share

அஸ்காபாத்: நாட்டு மக்கள் வறுமையில் வாட துருக்மெனிஸ்தான் அதிபர் 19 அடி தங்க சிலையை திறந்துவைத்து உள்ளார்.

துருக்மெனிஸ்தான் அதிபர், நாய் ஒன்றின் மிகப்பெரிய தங்க சிலையை திறந்து வைத்தார். இந்த சிலையின் உயரம் 19 அடி. இது அலாபை எனும் இனத்தை சேர்ந்த நாய்; துருக்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலிக்கு விருப்பமான நாய் இனமாக இருந்தது.

மத்திய ஆசியாவில் மேய்ச்சல் நாயான இது, துருக்மெனிஸ்தான் நாட்டின் பாரம்பரிய சின்னமாக இருந்து வருகிறது. அந்நாட்டின் அதிபரால் அந்நாய் இனம் அங்கீகரிக்கப்படுவது, கொண்டாடப்படுவது இது முதல்முறையல்ல.

கடந்த ஆண்டு அந்த நாய் இனத்திற்காக ஒரு புத்தகத்தை அர்ப்பணித்துள்ளார் குர்பங்குலி. இந்த தங்க நாய் சிலையானது, துருக்மெனிஸ்தான் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தங்க நாயின் சிலையை வடிவமைக்க உண்டான செலவு குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

இந்த நாய் சிலை திறந்துவைக்கப்பட்ட பொழுது ஒரு சிறுவனுக்கு இந்த அலாப இன நாய் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அகல்தெக எனும் பந்தயக் குதிரையும் வழங்கப்பட்டது. அகல்தெக குதிரை இனத்தின் மீதும் பெரும் காதல் கொண்டவர் அந்நாட்டின் அதிபர். 2015ஆம் ஆண்டு துருக்மெனிஸ்தான் அதிபர் இந்த குதிரையை ஓட்டுவது போல தங்க சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு இந்த நாயை புதினுக்கு அன்பளிப்பாக வழங்கினார் அப்போது துருக்மெனிஸ்தான் அதிபர் நாயைக் கழுத்தை பிடித்து தூக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 31

0

0