70 மீட்டர் உயரம்.. 600 மீட்டர் நீளம் : ஈஃபில் கோபுரத்தில் கயிற்றில் நடந்து சாதனை படைத்த இளைஞர்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2021, 3:13 pm
Eiffel Tower -Updatenews360
Quick Share

பிரான்ஸ் : பாரிஸ் பகுதியில் புகழ்பெற்ற ஈஃபில் கோபுரத்தில் இருந்து மறுபுறம் உள்ள கட்டடம் வரை கயிறு மேல் நடந்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நாதன் பவுலின் என்று அழைக்கப்படும் அந்த இளைஞர் ஈஃபில் கோபுரத்ததில் இருந்து மறுபுறம் உள்ள கட்டடம் வரை கயிறு மேல் நடந்து சாதனைந படைத்துள்ளார்.

சுமார் 600 மீட்டருக்கு அருகே உள்ள சாய்லாட் என்ற திரையரங்கு வரை 70 மீட்டர் உயரத்தில் கயிற்றின் மீது அசாத்தியமாக நடந்து சென்ற இளைஞர் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இவரின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பாக அவரே கடந்த 2017ஆம் ஆண்டு இதே போல் நடந்து சென்றது குறிப்பிடதக்கது.

Views: - 437

0

0