அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பாகிஸ்தான் பெண்! லைக்ஸ் சும்மா அள்ளுது!!

1 March 2021, 8:33 am
Quick Share

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் போலவே, அச்சு அசலாக இருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த அழகி ஒருவர் தான் இப்போது இணையத்தில் ஹாட்டாக வலம் வருகிறார். அவரது புகைப்படங்கள் நெட்டிசன்களால் விரும்பப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது.

உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பட்டம் வென்று தந்தவர் ஐஸ்வர்யா ராய். பின் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தமிழ் படமான ‘இருவர்’ படத்தில் அறிமுகமாகி, பாலிவுட்டில் கொடி கட்டி பறந்தார். அமிதாப் பச்சன் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட இவர், தற்போதும் படங்களில் நடித்து பெரும் புகழ் சேர்த்து வருகிறார். இந்தியா சார்பில் பலர் உலக அழகி பட்டங்களை வென்றிருந்தாலும், ஐஸ்வர்யா ராய் அதில் மிகவும் ஸ்பெஷல். ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் அவர்.

இந்நிலையில், இளமைக்கால ஐஸ்வர்யா ராய் போலவே அச்சு அசலாக இருக்கிறார் பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண் ஒருவர். இளமை பதுமையாக இருக்கும் ஆம்னா இம்ரான் தான் அவர். ஐஸ்வர்யா ராய் போலவே போஸ் கொடுத்து, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஜொல்லர்கள் அதிகம். அவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட் அளிக்கும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஆம்னா.

ஐஸ்வர்யா ராய் போல தோற்றமளிக்கும் முதல் நபர் ஆம்னா அல்ல. முன்னதாக, அம்மஸ் அம்ருதா என்ற டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் நட்சத்திரம், அச்சு அசலாக ராய் போலவே தோற்றமளித்து இணையத்தில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 12

0

0