16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 30 பேர் கொண்ட கும்பல்..!

24 August 2020, 5:27 pm
Quick Share

இஸ்ரேல் நாட்டில் 16 வயது சிறுமி ஒருவர் 30 பேரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கக்கோரி அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.

அங்குள்ள கடலோர நகரமான ஈலாட் சுற்றுலாவுக்கு பெயர்போன நகரமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ரிசார்ட்டில் தங்கி உல்லாசமாக இருப்பது வழக்கம். அவ்வாறு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இளைஞர்கள் குழு ஒன்று அங்குள்ள ரிசார்ட் ஒன்றுக்கு சென்றுள்ளது.

அங்கு மது அருந்திவிட்டு அந்த குழு கொண்டாட்டத்தில் ஈடுபாட்டுள்ளது. அப்போது அங்கு போதையில் இருந்த 16 வயது சிறுமியை கண்ட அந்த குழு, ஒரு அரையில் வைத்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும் அந்த குழுவில் இருந்த சிலர் அதை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

ஆனால் அப்போது அந்த சிறுமியுடன் இருந்த ஆண் நண்பர் சிறுமியை காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை எனகூறப்படுகிறது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது அந்நாடு முழுவதும் பரவி பெரும் புயலை கிழப்பியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சிறுவர்கள் என்றும், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இதில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சுமார் 30 பேர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்ததாவது, ஈலத் நகர ஓட்டலில் 30 ஆண்கள் சேர்ந்து ஒரு 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

நாட்டில் பலாத்கார நிகழ்வுகள் அதிகரித்துவிட்டதை எதிர்த்து போராடி வருகிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அனைவருக்கும் உரிய தண்டனை அளிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க, மாணவர்களுக்கு பள்ளிகளில் போதனை முறைகள் மாற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டார். நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் இஸ்ரேல் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.

Views: - 11

0

0