என் கிட்ட மோதாதே..! பெரிய நாயை விரட்டி அடிக்கும் குட்டி பப்பி

26 January 2021, 9:38 am
Quick Share

தனது தட்டில் இருக்கும் பிஸ்கட்டை எடுக்க வரும் பெரிய நாய் ஒன்றை, அளவில் மிகச்சிறியதாக இருக்கும் குட்டி பப்பி ஒன்று விரட்டி அடிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆளுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை என்ற பழமொழி ஒன்று உண்டு. மொரட்டு ஆளாக இருப்பார்.. ஆனால் பாத்ரூம் தனியாக போக பயம் கொள்வார். சுள்ளானாக இருக்கும் ஒருவர் பெரிய சம்பவத்தையே நிகழ்த்தி காட்டுவார். இரண்டுமே நமக்கு ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தும். அப்படி ஒரு சம்பவம் ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

https://www.facebook.com/trynottolaughpets/videos/255660036180064

‘டிரை நாட் டு லாஃப்’ தனது பேஸ்புக் பக்கத்தில், வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதன் கீழ், பெரிய நாயை அச்சுறுத்தும் சிறிய நாய் என பதிவிட்டிருந்தது. வீடியோவில், அளவில் மிகச்சிறிய அளவில் இருக்கும் குட்டி நாய் ஒன்று, தட்டு ஒன்றில் இருக்கும் பிஸ்கட்களை பாதுகாத்துக் கொண்டே சாப்பிடுகிறது. அந்த வீட்டில் வளரும் மற்றொரு பெரிய நாய், பிஸ்கட்டை எடுக்க முயற்சிக்கிறது.

கோபமடையும் குட்டி நாய், பெரியதை குரைத்து விரட்டுகிறது. ஒரு கட்டத்தில் எப்படியும் நம்மை இந்த குட்டி சாப்பிட விடாது என புரிந்து கொண்ட பெரிய நாய், தட்டிலிருந்து கீழே சிதறியிருக்கும் பிஸ்கட்டுகளை எடுத்து சாப்பிடுகிறது. கடைசி வரை தனது கோபத்தை குறைக்காத அந்த குட்டி தான் இப்போது இன்டர்நெட்டின் ஹாட் ஸ்டார். ஒரு நிமிடம் மட்டுமே ஓடும் அந்த வீடியோவுக்கு பேஸ்புக்கில் இதுவரை 20 ஆயிரம் பேர் லைக்ஸ்களை குவித்துள்ளனர். 1.2 ஆயிரம் பேர் கமென்ட் செய்துள்ளனர். ரொம்ப கோவக்கார நாயா இருக்குமோ…?

Views: - 0

0

0