டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் அதிகாரிக்கு கொரோனா : அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!

17 July 2021, 11:16 am
OLY-2020-TOKYO-JPN-JAPAN

A dog is pictured on the Olympic Rings displayed at the Japan Sport Olympic Square beside the new National Stadium, still under construction, in Tokyo on July 24, 2019, one year before the start of the Tokyo 2020 Olympic Games. (Photo by CHARLY TRIBALLEAU / AFP) (Photo credit should read CHARLY TRIBALLEAU/AFP/Getty Images)

Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முறைகளை பின்பற்றி 10 ஆயிரம் ரசிகர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் அதிகரித்ததால், கடந்த 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு பிரதமர் யோஷிஹிடே சுகா அறிவித்தார்.

ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 6 தினங்களே உள்ள நிலையில், அனைத்து நாடுகளின் வீரர்களும் ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் இருக்கும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சுமார் 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கும் பகுதியில் இருந்த அந்த அதிகாரி வெளியேற்றப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அந்த நபர் யார் என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Views: - 168

0

0

Leave a Reply