ஹெபசாத்-இ-இஸ்லாம் அமைப்பின் முக்கியத் தலைவர் கைது..! இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக பங்களாதேஷில் நடவடிக்கை தீவிரம்..!

7 May 2021, 8:10 pm
shahinur_pasha_arrest_bangladesh_updatenews360
Quick Share

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பங்களாதேஷ் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கையை தீவிரப்படுத்தி வரும் நிலையில், கிழக்கு வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவின் உயர் தலைவர் இன்று கைது செய்யப்பட்டார் என்று ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெபசாத்-இ-இஸ்லாத்தின் சட்ட விவகார நிபுணரான வழக்கறிஞர் மவுலானா ஷாஹினூர் பாஷா சவுத்ரி, குற்றவியல் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் சில்ஹெட்டில் உள்ள சுபித்பஜாரில் கைது செய்யப்பட்டதாக டாக்கா ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.

இருப்பினும், முன்னாள் சுனம்கஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய மவுலானா ஷாஹினூர் பாஷாசவுத்ரி மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறை வெளியிடவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாத குழு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திய பின்னர் சமீபத்திய வாரங்களில் டஜன் கணக்கான ஹெபாசாத் தலைவர்களும் ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களாதேஷ் பயணத்தின் போது வன்முறையைத் தூண்டியதற்காகவும், 2013’ஆம் ஆண்டில் வன்முறை ஆர்ப்பாட்டங்களை நடத்தியதற்காகவும் சில ஹெபாசத் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள.

அப்போதைய எம்பி அப்துஸ் சமத் ஆசாத் இறந்த பின்னர், 2005’ல் நடந்த சுனம்கஞ்ச் இடைத்தேர்தலில் சவுத்ரி நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இஸ்லாமிய அரசியல் கட்சியான ஜாமியத் இ உலமா-இ-இஸ்லாம் பங்களாதேஷின் துணைத் தலைவராகவும் சவுத்ரி பணியாற்றியுள்ளார். 2008 மற்றும் 2018’ஆம் ஆண்டுகளில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அவர், இரண்டு முறையும் தோல்வியடைந்தார்.

Views: - 171

0

0