சீன விவகாரத்தில் அதிரடி திருப்பம்..! 60 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளை மாளிகைக்கு அழைத்து உபசரிக்கப்பட்ட திபெத் தலைவர்..!

21 November 2020, 9:43 pm
Tibetan_Leader_in_White_House_UpdateNews360
Quick Share

நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் தலைவர் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குச் சென்று திபெத்திய பிரச்சினைகள் தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த அமெரிக்க அதிகாரியைச் சந்தித்ததாக மத்திய திபெத்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இது சீனாவின் உள் விவகாரங்களில் தலையிட முயற்சிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை என ;கண்டித்துள்ளது.

டாக்டர் லோப்சாங் சங்கே நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நுழைந்தார். இது ஒரு வரலாற்று சாதனையாகும். கடந்த 60 ஆண்டுகளில் மத்திய திபெத்திய நிர்வாகத்தின் (சி.டி.ஏ) தலைவர் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று சி.டி.ஏ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“வெள்ளை மாளிகையில் முறைப்படி நுழைந்த மத்திய திபெத்திய நிர்வாகத்தின் முதல் அரசியல் தலைவராக இருப்பது ஒரு பெரிய மரியாதை” என்று சங்கே ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

“இன்றைய பயணம் சி.டி.ஏவின் ஜனநாயக அமைப்பு மற்றும் அதன் அரசியல் தலைவருக்கு கிடைத்த அங்கீகாரமாகும். இந்த முன்னோடியில்லாத சந்திப்பு ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கும். மேலும் வரும் ஆண்டுகளில் இது இன்னும் முறைப்படுத்தப்படும்.” என்று சி.டி.ஏ. தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் தர்மசாலாவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக திபெத்திய பிரச்சினைகளுக்கான புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் டெஸ்ட்ரோவை சந்திக்க மத்திய திபெத்திய நிர்வாகத்தின் தலைவர் சங்கே நேற்று வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டார்.

அக்டோபர் 15’ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ திபெத்திய பிரச்சினைகளுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக மூத்த இராஜதந்திரி டெஸ்ட்ரோவை நியமித்தார். மற்ற விஷயங்களில், சீனாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கும் தலாய் லாமாவுக்கும் இடையிலான உரையாடலை முன்னெடுப்பதில் அவர் கவனம் செலுத்துவார்.

டெஸ்ட்ரோவின் நியமனத்தை சீனா விமர்சித்துள்ளது, இது திபெத்தை ஸ்திரமற்றதாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரசியல் நடவடிக்கை என்று கூறியுள்ளது. டெஸ்ட்ரோவின் நியமனத்திற்குப் பிறகு, சங்கே அவரைச் சந்தித்து திபெத்தின் நிலைமை குறித்து விவாதித்தார்.

Views: - 23

0

0