தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடினர். அங்கு பெரிய அளவிலான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, முதல் முறையாக முகக் கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவீன் கூட்டம் இது என்பதால் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர்.
பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தால் நசுக்கப்பட்டதில் சிக்கிய மக்களில் சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய நாட்டை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், மாரடைப்புக்கு ஆளான சுமார் 50 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோலில் ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.…
மீண்டும் மீண்டும் கோலிவுட்டின் ராக்ஸ்டார் என்று புகழப்படுபவர் அனிருத். GenZ தலைமுறையினரின் Pulse-ஐ பிடித்துக்கொண்ட அனிருத் தற்போது தமிழ் சினிமாவின்…
தஞ்சாவூர் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான புண்ணியமூர்த்தி. இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இதில்…
கம்மி பட்ஜெட், மிகப்பெரிய வெற்றி கடந்த மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில்…
ஜம்மு காஷ்மீரில் பகல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடததிய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கடந்த ஏப்ரல் 22ல்…
கோவை வடகோவை - பீளமேடு ரயில் நிலையங்கள் இடையே உள்ள ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே உள்ள தண்டவாளத்தில் கற்களை…
This website uses cookies.