பழைய டயர வச்சு இவங்க என்ன பண்ணியிருக்காங்க பாருங்க..

Author: Poorni
10 January 2021, 9:45 am
Quick Share

பயன்படுத்தப்பட்ட பழைய டயர்களை கொண்டு மிகப்பெரிய தங்க டிராகனை உருவாக்கி, சீனாவில் ஒரு குழு சாதனை படைத்துள்ளது. இதற்காக 1000 பழைய டயர்கள் பயன்படுத்திய அக்குழு, 8 மீட்டர் நீளத்தில், 20 நாட்கள் உழைப்பில் இந்த டிராகனை உருவாக்கி உள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கழிவுகளால் மக்களுக்கும், மண்ணுக்கும் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். தரையில் கொட்டப்படும் மக்காத குப்பைகளான இவை மண் வளத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. பிளாஸ்டிக், ரப்பரை எரிப்பதால் உண்டாகும் புகை, பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் இருந்தாலும், பிளாஸ்டிக், ரப்பர் கழிவின் தீமைகள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததாலும், அலட்சியப் போக்காலும் பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் உள்ள 3 பேர் அடங்கிய குழு ஒன்று, பழைய ரப்பர் டயர்களை பயன்படுத்தி, புராதண உயிரின சிற்பங்களாக மாற்றி வருகின்றனர். டயர்களை கலைப்படைப்புகளாக மாற்றி வரும் அவர்கள்ல தற்போது உருவாக்கிய பெரிய டிராகன் ஒன்று பார்வையாளர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

மக்கள் பயன்படுத்திய, மீண்டும் உபயோகம் செய்ய முடியாத பழைய டயர்களை கொண்டு, 8 அடி நீளத்தில், 3.5 அடி உயரத்தினாலான, தங்க டிராகனை அவர்கள் உருவாக்கி உள்ளனர். இதற்கு 1000 பழைய டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 20 நாட்கள் கடும் உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த டிராகன் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

அடுத்து அவர்கள், சீன நாட்டு ராசிகளை, கலைப்படைப்புகளாக மாற்ற முயற்சித்து வருகிறார்கள். சீன நாட்டின் 12 ராசி சின்னங்களான, எலி, டிராகன், நாய், புலி, ஆடு, பாம்பு, எருது, முயல், பன்றி, குரங்கு, குதிரை மற்றும் சேவல் ஆகியவற்றை பழைய டயர்களை கொண்டு உருவாக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.

Views: - 50

0

0