கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு…லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்த கனடா: ஒட்டாவா நகரில் அவசர நிலை பிரகடனம்..!!

Author: Rajesh
7 February 2022, 6:30 pm
Quick Share

ஒட்டாவா: கட்டாய தடுப்பூசிக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கனடாவின் ஓட்டாவா நகரில் அவசரகால நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

எல்லைகளை கடந்து செல்லும் லாரி ஓட்டுநர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என்ற அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து கடந்த 29ம் தேதி லாரி ஓட்டுநர்கள் ஒட்டோவா நகரை சென்றடைந்தனர். அன்று முதல் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளதால் நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக கூறி ஒட்டாவா நகர மேயர் அவசரகாலநிலை பிரகடனம் செய்துள்ளார். ஒட்டாவா நகரின் முக்கிய பகுதிகளில் லாரிகளை நிறுத்தியும் கூடாரங்களை அமைத்தும் இவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

சைரன்களை அடித்தும், பட்டாசு வெடித்தும் நூதன முறையில் லாரி ஓட்டுநர்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருவதால் ஓட்டாவா நகர நிர்வாகம் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஒட்டாவா நகரில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 1236

0

0