அமெரிக்காவில் எகிறும் கொரோனா… சீன அதிபருடன் டிரம்ப் இன்று ஆலோசனை!

27 March 2020, 10:24 am
Trump 02 updatenews360
Quick Share

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென்று அதிகரித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், அதிபர் டிரம்ப் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கடந்தாண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. முதலில் சீனாவில் வேகமாக பரவி, பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கியது.

பின்னர், இந்தியா உள்பட பிற உலக நாடுகளில் பரவி, தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. முதலில் ஐரோப்பிய நாடுகளை அலறவிட்ட கொரோனா, தற்போது அமெரிக்காவை உலுக்கி எடுத்து வருகிறது.

உலகளவில் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி, அமெரிக்கா முதலிடம் உள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் அமெரிக்காவில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள மிக நெருக்கடியான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக, இதில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply