இந்திய பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: இங்கிலாந்து செல்ல ‘நோ’ தடை…ஆனால் ஒரு கண்டிஷன்…!!

Author: Aarthi Sivakumar
18 September 2021, 11:01 am
Quick Share

லண்டன்: இந்திய பயணிகளுக்கான பயணத்தில் பல்வேறு தளர்வுகளை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த சா்வதேச பயண விதிமுறைகளில் இங்கிலாந்து அரசு புதிய தளா்வுகளை அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்ட இந்தியர்களுக்கான பயண தடையில் இங்கிலாந்து தளர்வுகளை அறிவித்துள்ளது.

அக்டோபர் 4ம் தேதி முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்துக்கு வரும்போது, பி.சி.ஆர். பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என கூடுதல் சலுகையையும் அறிவித்துள்ளது. சா்வதேச நாடுகளை சிவப்பு, ஆம்பர் மற்றும் பச்சை என பல வண்ணங்களில் இங்கிலாந்து வரிசைப்படுத்தி வைத்திருந்தது.

இவற்றில் இந்தியா ஆம்பர் வண்ண பட்டியலில் இருந்தது. சிவப்பு, ஆம்பர் வண்ண பட்டியலில் இருந்த நாடுகளை சோந்தவா்கள் இங்கிலாந்து செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில், சிவப்பு பட்டியல் மட்டுமே இனி அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவைதவிர பயண தடை பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட 8 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Views: - 309

0

0