ஏப்ரல் 12 வரை சர்வதேச விமானப் பயணத்திற்கு அனுமதி கிடையாது..! பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு..!

23 February 2021, 2:36 pm
Britain_Corona_UpdateNews360
Quick Share

கொரோனா பரவுவதைக் கருத்தில் கொண்டு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டிலிருந்து மற்றும் நாட்டிற்கு வரும் அத்தியாவசியமற்ற சர்வதேச பயணங்களுக்கு குறைந்தபட்சம் மே 17 வரை தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். 

கொரோனா தொற்றால் பயண மற்றும் விமானத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொற்றுநோய்களின் போது, ​​புதிய கொரோனா திரிபு பரவி வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 12’ஆம் தேதிக்கு முன்னதாக உள்நாட்டு இரவு தங்குமிடங்கள் மற்றும் தன்னிறைவான தங்குமிடங்கள் அனுமதிக்கப்படாது. அதேபோல் அத்தியாவசியமற்ற சர்வதேச பயணம் தடைசெய்யப்படும் என்று பிரதமர் ஜான்சன் கூறினார்.

கொரோனா ஊரடங்கின் திட்ட வரைபடத்தை பாராட்டிய போரிஸ் ஜான்சன், “இது திட்ட வரைபடத்தின் இரண்டாவது படியின் ஒரு பகுதியாகும், இது முதல் கட்டத்திற்குப் பிறகு குறைந்தது ஐந்து வாரங்களாவது நடைபெறும். மார்ச் 8 முதல் இது திட்டமிடப்பட்டாலும், நிபுணர்கள் இது அவசியம் என சொன்னால் ஒத்திவைக்கப்படலாம்.” எனக் கூறினார்.

சர்வதேச விடுமுறைகள் அனுமதிக்கப்பட வேண்டிய தேதி மே 17’க்கு முன் இல்லை என்று அவர் கூறினார்.

சர்வதேச பயணங்கள் எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் தொடங்கலாம் என்று பரிந்துரைத்து ஏப்ரல் 12’ஆம் தேதிக்குள் ஒரு அறிக்கையை வெளியிட அரசாங்கத்தின் உலகளாவிய பயண பணிக்குழு மீண்டும் கூடும், என்றார்.

போரிஸ் ஜான்சன் இது “கோடைகாலத்திற்கான திட்டங்களை உருவாக்க மக்களுக்கு நேரம் கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும் இது விமான போக்குவரத்துத் துறைக்கு பொருளாதார ரீதியாக கடும் சேதத்தை ஏற்படுத்தும் என, விமான போக்குவரத்துத் துறையில் உள்ள நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

Views: - 1

0

0

Leave a Reply