இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாட்டில் தளர்வு: தடுப்பூசி போட்டிருந்தால் தனிமைப்படுத்துதல் அவசியமில்லை…இங்கிலாந்து அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
18 August 2021, 8:16 am
Quick Share

லண்டன்: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு குறைந்து வருவதால் இந்தியாவுக்கான பயண கட்டுப்பாடுகளை இங்கிலாந்து தளர்த்தி அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியதால் கடந்த மே மாதத்தில் இங்கிலாந்து இந்தியாவுக்கு பயணக் கட்டுப்பாடு விதித்தது.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டு தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கான பயண கட்டுப்பாடுகளை இங்கிலாந்து தளர்த்தியுள்ளது. இதன்படி இந்தியாவில் இருந்து திரும்பும் தடுப்பூசி முழுமையாக போட்ட இங்கிலாந்து குடிமக்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 351

0

0