நீரவ் மோடியை நாடு கடத்த ஒப்புதல்..! நாடு கடத்துவதற்கான ஆணையில் பிரிட்டன் உள்துறை செயலாளர் கையெழுத்து..!

16 April 2021, 6:18 pm
Nirav_Modi_UpdateNews360
Quick Share

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு ஒப்படைக்க பிரிட்டனின் உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2 பில்லியன் டாலர் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஊழல் வழக்கு தொடர்பாக இந்தியாவில் தேடப்படும் நபராக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் தான் வைர வியாபாரி நீரவ் மோடி. 

இவர் பிரிட்டனில் பதுங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரை நாடு கடத்தும் முயற்சியை இந்தியா மேற்கொண்டது. இரண்டு வருடங்களாக நீடித்த இந்த முயற்சி, கடந்த பிப்ரவரி 25 அன்று இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான சட்டப் போரில் நீரவ் மோடி தோல்வியடைந்ததை அடுத்து புதிய திருப்பத்தை எடுத்தது.

இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தனது 83 பக்க உத்தரவில் நீரவ் மோடிக்கு இந்தியாவில் ஒரு நியாயமான விசாரணை வழங்கப்பட மாட்டாது என்று கூறியதை நிராகரித்தது.

இந்தியாவில் தொற்றுநோய் மற்றும் சாத்தியமான மனித உரிமை மீறல் காரணமாக நீரவ் மோடியின் மனநலம் மோசமடைந்து வருவதாக நீரவ் மோடியின் வக்கீல் குழுவின் மற்றொரு வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்து இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்தது.

பிரிட்டன் உள்துறை செயலாளர் கையெழுத்திட்ட நிலையில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டுவந்த உடன் மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறைச்சாலையின் பாரக் 12 செல்லில் அவர் அடைக்கப்படுவார்.

Views: - 65

0

0