இந்தியாவில் உச்சக்கட்டத்தில் கொரோனா..! பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை மீண்டும் ரத்தா..?

14 April 2021, 9:20 pm
Boris_Johnson_UpdateNews360
Quick Share

இந்தியாவில் உள்ள கொரோனா நிலைமை காரணமாக, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவுள்ள தனது இந்திய பயணத்தின் நீளத்தை குறைத்துள்ளார் என அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார். 

எவ்வாறாயினும், ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் இந்த பயணத்தின் போது, போரிஸ் ​​ஜான்சன் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார்  என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பயணத்தின் திருத்தப்பட்ட காலம், அட்டவணை மற்றும் பிற விவரங்கள் போன்ற வருகையின் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னர் அறிவித்தபடியே, போரிஸ் ஜான்சன் ஏப்ரல் கடைசி வாரத்தில் இந்தியாவுக்கு வருவார். முன்னதாக, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் அவர் சிறப்பு விருந்தினராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பிரிட்டனின் கொரோனா நிலைமை மற்றும் கொரோனாவின் புதியவகை கொரோனா மாறுபாடு குறித்த வளர்ந்து வரும் கவலைகள் ஆகியவற்றின் காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

“கொரோனா வைரஸ் என்பது தலைமுறைகளாக நாம் கண்ட மிக அழிவுகரமான சக்தி மற்றும் நாம் அனுபவித்த நவீன உலக ஒழுங்கின் மிகப்பெரிய சோதனை என்பதில் சந்தேகமில்லை. ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க திறந்த மனப்பான்மையுடன் ஒன்றுபடுவதன் மூலம் சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலை நாம் அணுகுவது சரியானது.” என்று பிரிட்டன் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போதைய போரிஸ் ஜான்சன் பயணத்தின் காலம் குறைக்கப்பட்டாலும், பாதுகாப்பு ஒப்பந்தங்கள், சீனா, கொரோனா ஆகியவை இருதரப்பும் விவாதிக்கப்படக்கூடிய முக்கிய பிரச்சினைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 20

0

0