நிம்மதியான தூக்கத்துக்கு இவர் செலவு செய்தது ரூ.35 லட்சம்! ஏன் தெரியுமா?

3 February 2021, 8:54 am
Quick Share

அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட 22 வயது இளம் பெண் ஒருவர், கடந்த சில ஆண்டுகளாகவே தூக்கிமின்றி தவித்து வந்த நிலையில், ரூ.35 லட்சம் செலவு செய்து அவருக்கு நடத்தப்பட்ட ஆபரேஷன் காரணமாக தற்போது நிம்மதியாக தூங்கி வருகிறாராம்.

காம்ப்ளக்ஸ் ரீஜினல் பெய்ன் சின்ட்ரோம் (சிஆர்பிஎஸ்) என்ற அரியவகை நோய், நோயாளிகளின் கை, கால்களில் கடும் வலியை கொடுக்கக் கூடியது. தொடர்ச்சியாக உடலில் வலியை கொடுக்கும் இந்த நோய், ஒரு மில்லியன் பேரில் ஒருவருக்கு ஏற்படும். பிரிட்டனில் லீசெஸ்டர்ஷையரை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ரூபி சேம்பர்லெய்ன் என்பவருக்கு இந்த அரிய நோய் தாக்கியிருக்கிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘வலி காரணமாக என்னால் தூங்க கூட முடியாது. உயிர் போகும் அளவுக்கு வலி ஏற்படுவதால், தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் கூட தூங்கியது இல்லை. தூக்கமின்மையால் என் வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. வெளியே செல்ல முடியாது; நண்பர்களைச் சந்திக்க முடியாது; எந்த வேலையும் செய்ய முடியாது. வலி நிவாரணிகள், பிஸியோ தெரபி உள்ளிட்ட பல வழிகளை தேர்ந்தெடுத்தும் என்னால், வலியை குறைக்க முடியவில்லை. முதுகெலும்பு தூண்டுதலுக்கான ஆப்பரேஷன் செய்தால் என்னால் தூங்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்காக 35 ஆயிரம் டாலர்கள் எனக்கு தேவைப்பட்டது. மக்களிடம் நன்கொடையாக பெற்ற பணத்தில் நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் எனக்கு இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சர்ஜரியில், ஒரு பேஸ்மேக்கர் ஒன்று என் மணக்கட்டிற்கு அடியில், பொருத்தப்பட்டது. அது என் முதுகெலும்பில் உள்ள எலெக்ட்ராட்ஸ்களுடன் இணைக்கப்பட்டது. இப்போது அதன் உதவியுடன் தான் நான் தூங்கி கொண்டிருக்கிறேன்.

ரிமோட் கண்ட்ரோலில் தூங்குவதற்கான பட்டனை நான் அமுக்கினால் போதும், அது வலியை தடுத்து தூக்கம் வர வைக்கிறது. இப்போது பொருளாதாரத்தில் பட்டம் படித்து வருகிறேன். வலிகளும் 80 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. என் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது. குடும்பத்துடன் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட முடிகிறது. வெளியே செல்ல உற்சாகமாக இருக்கிறேன்’’ என்றார்.

Views: - 0

0

0