நாங்க யார் கூடயும் கூட்டு இல்ல… ஆள விடுங்கடா சாமி… சரண்டரான உக்ரைன் : போரை நிறுத்த முன்வந்தது ரஷ்யா…!!!

Author: Babu Lakshmanan
25 February 2022, 4:41 pm
Quick Share

உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் – ரஷ்யா முடிவு செய்துள்ளன.

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா படைகள் நேற்று போர் தொடுத்தன. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்ய படைகள், உக்ரைனை சூறையாடி வருகின்றன. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் உக்ரைன் நாட்டின் ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தத் தாக்குதலில் இதுவரையில் நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யா தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தங்களின் வீரர்கள் கொல்லப்படுவதாலும், சிலர் சரணடைந்து வருவதாலும், தங்களின் நாட்டு ஆண் குடிமகன்கள் கட்டாயம் போரில் பங்கெடுக்க வேண்டும் என்று கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே, உக்ரைனில் 2வது நாளாக இன்றும் தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. தலைநகர் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா படைகள் ஆக்கிரமித்து விட்டதாகக் கூறப்படுகிறது. டாங்கிகள், போர் விமானங்கள் அனைத்து அந்த நகரங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது :- எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம்.

நானும் எனது குடும்பத்தினரும் இன்னும் கீவில் தான் இருக்கிறோம். ரஷ்யப் படைகளின் இலக்கு நாங்கள் தான் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கிறோம். பொதுமக்கள் ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்குமாறு வேண்டுகிறோம். உக்ரைனை அரசியல் ரீதியாக செயலிழக்கச் செய்வதே ரஷ்யாவின் இலக்கு, எனக் கூறியுள்ளார்.

இதனிடையே, நேட்டோ, ஷோவியத் என எதிலும் நாங்கள் கூட்டு சேரவில்லை என்றும், நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகரான மிக்கெய்லோ தெரிவித்துள்ளார். மேலும், சமாதானத்தை உக்ரைன் விரும்புவதாகவும், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று உக்ரைன் அதிபர் மாளிகை கூறியுள்ளது.

Viladimir_Putin_UpdateNews360

இதையடுத்து, உக்ரைன் போரை நிறுத்தினால், நாங்களும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால், விரைவில் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 894

0

0