நிராகரிக்கப்பட்ட ‘எச் – 1பி விசா’வுக்கு மீண்டும் வாய்ப்பு: அமெரிக்கா அறிவிப்பு..!!

25 June 2021, 9:10 am
Quick Share

வாஷிங்டன் : வெளிநாட்டினர் தங்களின் நிராகரிக்கப்பட்ட ‘எச் – 1பி விசா’ விண்ணப்பத்தை மீண்டும் தாக்கல் செய்யலாம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு வல்லுனர்களை பணியமர்த்த ‘எச் – 1பி விசா’ வழங்கப்படுகிறது. இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கை, கடந்த, 2020ல் மின்னணு முறையில் எச் – 1பி விசா விண்ணப்பத்தை பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்தது. கொரோனா காரணமாக நடப்பாண்டுக்கான விண்ணப்பங்கள் போதிய அளவில் வரவில்லை.


அதனால் 2020 ஆகஸ்ட் மாதம் வரை கையிருப்பில் இருந்த கூடுதல் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றின் பதிவு காலம் 2020 நவம்பர் 16ம் தேதியுடன் முடிவடைந்தது. எனினும் பதிவின் துவக்க காலத்தில் விண்ணப்பித்து அக்டோபர் 1ம் தேதிக்கு பின் விசா கோரிய விண்ணப்பங்கள் நிர்வாக ரீதியில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அதனால் கடந்த ஆண்டு விண்ணப்பித்து எச் – 1பி விசா நிராகரிக்கப்பட்டோர் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறையில் வல்லுனர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக,தள்ளுபடி செய்த எச் – 1பி விசா விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

Views: - 245

0

0