இனி இந்தியாவுக்கு செல்வது ஈஸி: பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா..!!

20 July 2021, 6:12 pm
Quick Share

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா 2ம் அலை பாதிப்பு மோசமாக இருந்ததால் அமெரிக்கர்கள் இங்கு பயணம் செய்யக்கூடாது என அறிவுறுத்தியிருந்த அமெரிக்கா தற்போது பாதிப்பு குறைந்துள்ளதால் நிலைமையை மறுபரிசீலித்துவிட்டு பயணிக்கலாம் என கூறியுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், பயணங்கள் குறித்த சுகாதார அறிவிப்புகளை முடிவு செய்கிறது. அதன்படி இந்தியாவை மே மாதம் 4ம் நிலைக்கு மாற்றியிருந்தது. அப்படி என்றால் அந்நாட்டிற்கு பயணம் செய்யக்கூடாது என்று அர்த்தம். அச்சமயத்தில் இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு 3 லட்சத்துக்கும் மேல் பதிவானது.

இந்தியா மீதான பயண பரிந்துரைகளை அமெரிக்கா எளிதாக்குகிறது: அறிக்கை |  Seithigaltamil

மேலும், ஆக்சிஜன் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு நிலவியது. தற்போது கோவிட் பாதிப்பில் நான்கு மாதங்களுக்கு பிந்தைய நிலையை இந்தியா அடைந்துள்ளது. 30 ஆயிரமாக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. தினசரி இறப்புகள் 400க்குள் பதிவாகிறது.
இந்நிலையில் 4ம் நிலையிலிருந்து இந்தியாவை 3ம் நிலைக்கு தளர்த்தியுள்ளது.

அதன்படி மறுபரிசீலனை செய்துவிட்டு அமெரிக்கர்கள் பயணிக்கலாம். அதே போல் பாகிஸ்தானுக்கான பயண கட்டுப்பாடுகளை சி.டி.சி., 2ம் நிலைக்கு தளர்த்தியது. இருப்பினும் உள்துறையானது, பயங்கரவாத அச்சுறுத்தல் கொண்ட நாடு என்பதால் அமெரிக்கர்கள் பயணங்களை மறுபரிசீலிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

Views: - 147

0

0